/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
/
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
ADDED : ஜூலை 12, 2025 01:01 AM
பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தேவராஜபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்த வீரபத்திரன், 50, மகன் விஜய், 27. இவர் அப்பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். உதவியாக தந்தை வீரபத்திரன் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 7:05 மணிக்கு வீட்டிலிருந்து போதகாட்டில் உள்ள தனியார் பால் கம்பெனிக்கு, பால் ஊற்ற மொபட்டில் வீரபத்திரன் சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து விஜய் உள்ளிட்ட உறவினர்கள் தேடிச் சென்றனர். இரவு, 10:00 மணியளவில் விஜய் விவசாயம் செய்யும் நிலத்தின் அருகில், வீரபத்திரன் இறந்த நிலையில் கிடந்தார். அவரை பார்க்கும் போது இடது காலில் மின்சாரம் தாக்கிய காயம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், அப்பகுதியில் இருந்த கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு அது தெரியாமல் அவ்வழியே வீரபத்திரன் வந்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டதாக விஜய் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

