ADDED : மே 12, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சென்ராயகவுண்டனுாரை சேர்ந்த விவசாயி சந்திரன், 60. நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில் பந்-தாரப்பள்ளி மேம்பாலம் அருகே, ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த புல்லட் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து வழக்குப்பதிந்த குருபரப்பள்ளி போலீசார், புல்லட்டை ஓட்டி வந்த பெங்களூரு, ஒசக்கோட்டையை சேர்ந்த சாகர், 25, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
