ADDED : அக் 30, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த நாரலப்பள்ளியை சேர்ந்தவர் வேணுகோபால், 50, விவசாயி. நேற்று முன்தினம் இரவு, அவரது நெல் வயலுக்கு காவலுக்கு சென்றவர், நேற்று காலை வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், வயலுக்கு சென்று பார்த்தபோது, வேணுகோபால் யானை தாக்கி பலியானது தெரிந்தது.

