தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மர்ம நபர்களால் விவசாயி கொலை

மர்ம நபர்களால் விவசாயி கொலை

மர்ம நபர்களால் விவசாயி கொலை


ADDED : மே 09, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, மர்ம நபர்களால் விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்-பட்டியை சேர்ந்தவர் சத்தியசீலன், 47, இவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு முரு-கம்மாள், 42, என்ற மனைவி, கோமதி, 20, என்ற மகள், மணி-கண்டன், 17, என்ற மகன் உள்ளனர்.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வீட்டை விட்டு சென்ற சத்தியசீலன் மீண்டும் திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று காலை அவ-ரது விவசாய நிலத்தில் சத்தியசீலன் ரத்த வெள்ளத்தில் மர்ம நபர்-களால் கொலை செய்யப்பட்டு

கிடந்தார்.

புகாரின்படி சம்பவ இடத்துக்கு, கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை மற்றும் நாகரசம்பட்டி போலீசார் சென்று விசாரித்தனர். பர்கூர் டி.எஸ்.பி., தனசேகர் தலைமையில், மூன்று தனிப்படை அமைத்து, கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம், போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us