/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருடு போன 2 ஆடுகளை திரும்ப பெற்ற விவசாயி
/
திருடு போன 2 ஆடுகளை திரும்ப பெற்ற விவசாயி
ADDED : ஏப் 30, 2025 01:33 AM
போச்சம்பள்ளி:
போச்சம்பள்ளி அடுத்த, தொப்படிகுப்பத்தை சேர்ந்தவர் சண்முகம், 52. இவர், கடந்த, 27ல் அதிகாலை, 2:00 மணிக்கு தன் டி.வி.எஸ்., விக்டர் பைக்கில், தட்டக்கல் பகுதியில், போதையில் வந்தவர், சாலையோர வேலியில் சிக்கி காயமடைந்தார். அவரை போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். சண்முகம் வைத்திருந்த சாக்குபையில், 2 ஆடுகள் இருந்தன. விசாரணையில் அவை திருடி விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வழியில், சண்முகம் விபத்தில் சிக்கியது தெரிந்தது. இது குறித்த செய்தி நம், 'காலைக்கதிர்' நாளிதழில், கடந்த, 28ல் வெளியானது.
இந்நிலையில், தண்ணீர்பள்ளம் அடுத்த, மேலேரிகொட்டாயை சேர்ந்த சுரேஷ், 38, என்பவரின், 2 ஆடுகள் கடந்த, 26ல் இரவு திருடப்பட்டிருந்தது. அதை, சுரேஷ் பல இடங்களில் தேடி வந்தார். கடந்த, 28ல், 'காலைக்கதிர்' நாளிதழை பார்த்த அவர், திருடப்பட்ட ஆடுகள் போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்து, அங்கு சென்றார். மேலேரிக்கொட்டாய், கிருஷ்ணகிரி டவுன் ஸ்டேஷன் எல்லை என்பதால், டவுன் ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் மூலம் சுரேஷிடம், 2 ஆடுகளையும் போலீசார் ஒப்படைத்தனர்.

