/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேனீக்கள் கொட்டி விவசாயி படுகாயம்
/
தேனீக்கள் கொட்டி விவசாயி படுகாயம்
ADDED : டிச 18, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, ஏணி அத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரப்பா, 65. அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று காலை, 8:30 மணிக்கு, அறுவடை செய்த ராகியை கட்டி கொண்டிருந்தார்.
, அப்பகுதியில் இருந்த மரத்தில் இருந்து கலைந்த தேனீக்கள், மாரப்பாவை கொட்டின. இதில் படுகாயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

