/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடப்பாறை ஆற்றின் குறுக்கில் அணை கட்ட கோரி விவசாயிகள் சங்கம் தீர்மானம்

ADDED : டிச 28, 2024 02:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி அடுத்த கீழ்பூங்கு-ருத்தி கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க கிளை திறப்பு விழா மற்றும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழக விவ-சாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராம
கவுண்டர், கிளைச் சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, கொடியை ஏற்றி வைத்தார்.
கூட்டத்தில், கீழ்பூங்குருத்தி கிராமத்தை சுற்றி யானைகளின் நட-மாட்டம் அதிகமாக உள்ளதால், யானைகள் தாண்டா அகழியை புதுப்பிக்க வேண்டும். விளை நிலங்களை நாசமாக்கும் காட்டுப் பன்றிகளை தடுக்க அரசு செலவில் சோலார் மின் வேலிகளை அமைக்க வேண்டும்.
பட்டாளம்மன் கோவில் அருகில் உள்ள தடுப்பணையை, 25 அடி-யாக உயர்த்தி, நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். வன விலங்-குகளால் பலியாகும் விவசாயிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்-பீடு வழங்க வேண்டும். சிங்காரப்பேட்டை அருகே உள்ள கடப்-பாறை ஆற்றின் குறுக்கில் அணை கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.