/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணை ஆற்றின் தண்ணீர் கேட்டு ராயக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 30, 2025 03:38 AM
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள, ஆழியாளம் அணைக்கட்டிலிருந்து, விவசாய நிலங்கள் வழியாக, தர்மபுரி துாள்செட்டி ஏரிக்கு, தென்-பெண்ணை ஆற்று நீரை கொண்டு செல்ல, தமிழக அரசின் மூலம், கால்வாய் அமைக்கப்படுகிறது. ராயக்கோட்டை வழியா-கத்தான் இக்கால்வாய் செல்கிறது. அதனால், ராயக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகளில் தென்-பெண்ணை ஆற்று நீரை நிரப்பும் வகையில், துாள்செட்டி ஏரிக்கு செல்லும் கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால் அமைத்து தர வேண்டும். அதன் மூலம் ஏரிகள் நிரம்பி, பல ஆயிரம் ஏக்கர் விவ-சாய நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, விவசாயிகள் தரப்பில்
கூறப்படுகிறது.
இந்நிலையில், ராயக்கோட்டை ஏரிகளில் தென்பெண்ணை ஆற்று நீரை நிரப்ப, கிளை வாய்க்கால் திட்டத்தை, தமிழக அரசு நிறைவேற்றக்கோரி, ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், தென்-பெண்ணை கிளை வாய்க்கால் கோரும், உழவர் அமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்-தது. விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.