ADDED : செப் 05, 2026 05:00 AM
அஞ்செட்டி; தளியிலிருந்து பிரிக்கப்பட்டு, அஞ்செட்டி தனி ஒன்றியமாக கடந்த, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்-கப்பட்டது. அதற்கு தனியாக கட்டடம் கட்ட, பூஞ்-சோலை கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை, வருவாய்த்துறையினர் தேர்வு செய்-தனர். ஏற்கனவே அந்த நிலத்தில், 29 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றன. 5 ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்-கின்றனர்.
அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்களை வெளியேற்ற, வருவாய்த்துறை தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இதை கண்டித்தும், அங்கு குடியிருக்கும் மக்களை வெளியேற்றக்கூடாது எனவும், அலுவலகத்திற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் எனக்-கூறியும், கடந்த, 23ம் தேதி முதல், நேற்று வரை, 13 நாட்களாக மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அக்கிராமத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்டில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் குமார
வடிவேல் தலைமை வகித்தார். வட்ட தலைவர் தேவராஜ் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.
