ADDED : மே 16, 2026 04:40 AM
ஊத்தங்கரை; உழவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், அவர்களை பாதுகாக்கவும், உழவுத் தொழிலை மேம்படுத்தவும், தமிழகம் முழுவதும் உழவர் பாதுகாப்பு இயக்கம் தொடங்-கப்பட்டு வருகிறது.
இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டி கிராமத்தில் உழவர் பாதுகாப்பு இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. கவரவ தலைவர் சண்முகசுந்தரம் முன்னி-லையில், உழவர் உரிமை இயக்கத்தின், 43-வது கிளை தொடங்கப்பட்டது. மாநில தலைவர் அருள்ஆறுமுகம், பொதுச் செயலாளர் சிவா ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சியில் விவசாயம் முன்னேற வழிமுறை, கருவிகளின் பயன்பாடு, வேதிப்பொ-ருட்கள் இன்றி விவசாயம் செய்யும் முறை போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மாநில துணைத் தலைவர் தண்டபாணி, துணை பொதுச் செயலாளர் சீனிவாசன், ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய தலைவர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
