/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
/
விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 31, 2024 07:08 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட செங்கொடிபுரம், அத்திமரத்துார், சித்தாண்டபுரம், பூஞ்சோலை, காமராஜபுரம், பையில்காடு, ஆண்டியூர் ஆகிய கிராம மக்களுக்கு இரு மாதங்களுக்குள் பட்டா வழங்குவதாக கடந்த அக்., மாதம் வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.
ஆனால், இதுவரை பட்டா வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அஞ்செட்டி தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. வட்ட செயலாளர் குமாரவடிவேல் தலைமை வகித்தார். தலைவர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம், அஞ்செட்டி தாலுகா வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, ஜன., மற்றும் பிப்., மாதங்களில் பட்டா வழங்குவதாக உறுதியளித்தனர்.