/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
/
10 கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
10 கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
10 கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
ADDED : நவ 28, 2024 01:00 AM
10 கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கோரி
தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
கிருஷ்ணகிரி, நவ. 28-
விவசாயிகளின், பத்து கேள்விகளுக்கு தமிழக முதல்வர், பதில் அளிக்கக்கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், நெல் ஆராய்ச்சியை மீண்டும் தொடங்க வேண்டும். நெல் ஆராய்ச்சி ஏன் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. ஜீனுாருக்கு கொடுத்த தோட்டக்கலைக்கல்லுாரி ஏன் பையூரிலேயே செயல்படுகிறது. பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், 70 சதவீதம் நிலத்தில் எந்த பயிரும் செய்யாமல் ஏன் நிலத்தை கரம்பாக வைத்துள்ளீர்கள்.
விவசாயிகளுக்கு பிடிக்காத தரமில்லாத விதைகளை நாற்றுவிட்டு அதை விவசாயிகள் வாங்கிச் சென்று நஷ்டம் அடைந்துள்ளனர். இதற்கு என்ன இழப்பீடு வழங்க உள்ளீர்கள். இந்த ஆண்டு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விட்டிருந்த நெல் நாற்றுகளை ஏன் மாடுகளை விட்டு மேயவிட்டீர்கள்.
வட மேற்கு மண்டலம் என கூறும் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு அரசு கொடுத்த, 50 ஏக்கர் நிலங்களை ஏன் இன்னும் கையகப்படுத்தாமல் உள்ளீர்கள். இது குறித்த நீதிமன்ற வழக்கு என்ன ஆனது. பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் பதவி ஏன் காலியாகவே வைத்து முடக்கப்பட்டுள்ளன. ஜீனுார் அரசு தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் எங்கு, எங்கு படிக்கின்றனர். பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை மட்டும் வளர்ப்பதால், இதை கால்நடை துறை ஆராய்ச்சிக்கு வழங்கலாமே, செய்வீர்களா? என்பது போன்ற, 10 கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.