/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டில் விவசாயி மர்மச்சாவு போலீசில் தந்தை புகார்
/
வீட்டில் விவசாயி மர்மச்சாவு போலீசில் தந்தை புகார்
ADDED : அக் 05, 2025 01:38 AM
அஞ்செட்டி, அஞ்செட்டி அருகே, வீட்டிற்குள் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்த நிலையில், சாவில் சந்தேகம் உள்ளதாக, அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் நஞ்சப்பன், 34. விவசாயி. திருமணமாகாத நிலையில், தன் தந்தையிடமிருந்து குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கி கொண்டு, தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:20 மணிக்கு, நஞ்சப்பன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
அவரது வீட்டின் பீரோ திறந்த நிலையில் இருந்தது. அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில், அவரது தந்தை மாது, நேற்று அஞ்செட்டி போலீசில் அளித்த புகாரில், நஞ்சப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த ராமலிங்கம், தப்பகுழி கோவிந்தசாமி மற்றும் திப்பசந்திரத்தை சேர்ந்த முத்துவேல் ஆகியோருடன் சேர்ந்து, நஞ்சப்பன் மது அருந்தி வந்துள்ளார். மகன் இறப்பில், அவரது நண்பர்கள் மீது சந்தேகம் உள்ளது என அதில் தெரிவித்திருந்தார். அதன்படி போலீசார் விசாரித்து வருகின்றனர். நஞ்சப்பனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்தான், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமா என தெரியவரும் என்று, போலீசார் தெரிவித்தனர்.