/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தைகளுடன் பெண் ஊழியர் மாயம்
/
குழந்தைகளுடன் பெண் ஊழியர் மாயம்
ADDED : டிச 27, 2024 01:24 AM
ஓசூர், டிச. 27-
ஓசூர், ஒன்னல்வாடியை சேர்ந்தவர் சரிதா, 31, தனியார் நிறுவன ஊழியர். இவர் தன், 5 வயது மற்றும், 4 மாத குழந்தைகளுடன், கடந்த, 15ல் வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சரிதாவின் தாய், ஓசூர் டவுன் போலீசில் புகாரளித்தார். அதில், திருவண்ணாமலையை சேர்ந்த கதிர்வேல் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாகலுார் பகுதியை சேர்ந்த, 16 வயதுபிளஸ் 2 மாணவி, கடந்த 23 ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அது குறித்து பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் தீர்த்தம் பகுதியை சேர்ந்த முனிராஜ் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.