தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தென்னை சாகுபடி குறித்த வயல்வெளி பயிற்சி

தென்னை சாகுபடி குறித்த வயல்வெளி பயிற்சி

தென்னை சாகுபடி குறித்த வயல்வெளி பயிற்சி


ADDED : ஆக 22, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; தோப்பூர் கிராமத் தில், தென்னை சாகுபடி குறித்த வயல்வெளி பயிற்சி அளிக்கப்பட்டது.

கற்பக விருட்சகம் என்று அழைக்கப்படும் தென்னை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்-ணகிரி, காவேரிப்பட்டணம், அரசம்பட்டி மற்றும் மத்துார் பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்-யப்பட்டுள்ளது. தென்னையில் சாகுபடி செலவை குறைத்து, அதிக மகசூல் பெற உதவும் தொழில்-நுட்பங்களை, விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில், கிருஷ்ணகிரி அடுத்த எலு-மிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம், தென்-னையில் உழவர் வயல்வெளி பள்ளியினை காவேரிப்பட்டணம் ஒன்றிம் தோப்பூர் கிராமத்தில் நடத்தியது.வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்-ஞானி சுந்தர்ராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, விதை தேர்வு, உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், பார்த்தீனியம் ஒழிப்பு மேலாண்மை தொழில் நுட்பங்களையும் எடுத்துரைத்தார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ரமேஷ், தொழில்நுட்பங்களை பயிற்சி பெறும் அனைவரும் நன்கு அறிந்து, தென்-னையில் உற்பத்தி செலவினை குறைத்து அதிக மகசூல் பெறவேண்டும் என்றார். வேளாண் அறி-வியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்-குமார் மற்றும் தென்னை விவசாயிகள் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us