ADDED : ஏப் 30, 2026 03:01 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே ஏராளமான பழைய பொருட்கள் குடோன்கள் உள்ளன.
இதில், ராம்நகரை சேர்ந்த உசேன், 30, என்பவருக்கு சொந்தமான குடோன் அருகே, பல உரிமையாளர்களுக்கு சொந்தமான பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் நேற்று மதியம், 12:30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிக-ளவில் கரும்புகை வெளியேறியதால், ஓசூர் பகுதி மக்கள் அதிர்ச்-சியடைந்தனர். ஓசூர் தீயணைப்புத்துறையினர் கிட்டத்தட்ட, 45 நிமிடங்களுக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.இருந்தாலும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இப்பகுதியில் ஆண்டுதோறும் பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்படுகிறது.
நகர் பகுதியில் பழைய பொருட்கள் குடோன் வைப்பதை தடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்-வாகம் கண்டுகொள்ளமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
