ADDED : ஏப் 17, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், தீ தொண்டு நாள் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு
மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் வேலு உத்தரவின்படி,
ஊத்தங்கரை நிலைய அலுவலர் ராமன் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள்,
ஊத்தங்கரை முக்கிய இடங்களான பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும்
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், தீ தடுப்பு குறித்து துண்டு
பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வை
ஏற்படுத்தினர். இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

