/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் மருத்துவமனையில்தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
/
பர்கூர் மருத்துவமனையில்தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
பர்கூர் மருத்துவமனையில்தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
பர்கூர் மருத்துவமனையில்தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : ஏப் 23, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி:பர்கூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில், மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தொண்டு நாள் வார விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்
பட்டது.
பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமை வகித்தார். முதன்மை மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கத்தை செய்து காண்பித்தனர்.
இதில், தீ விபத்து ஏற்பட்டால், மணல், தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கருவியை கொண்டு எவ்வாறு தீயை அணைப்பது, தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை மீட்டு, பாதுகாப்புடன் வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து, தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.