ADDED : ஜூலை 30, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை தீயணைப்பு- மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், தீரன் சின்னமலை சி.பி.எஸ்.இ., பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
மாணவ, மாணவியர் பாதுகாப்பாக இருப்பது, நீர் நிறைந்த ஏரி, கிணறு, குளம், அணைகளில் தவறி விழுந்தவர்களை காப்பாற்றுவது, வெள்ள நீர் மற்றும் ஆற்றில் அடித்து செல்பவர்களை கயிறுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் கொண்டு காப்பாற்றுவது தொடர்பாக, ஊத்தங்கரை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் மாணவ, மாணவியருக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை செய்து காட்டப்பட்டது.