தனியார் செக்யூரிட்டிகளுக்கு இன்று தீயணைப்பு பயிற்சி
தனியார் செக்யூரிட்டிகளுக்கு இன்று தீயணைப்பு பயிற்சி
ADDED : பிப் 09, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர் சிப்காட், ராயக்கோட்டை, தேன்கனிக்-கோட்டை, சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை ஆகிய, 8 தீயணைப்பு மீட்-புப்பணிகள் நிலையங்களிலும், தீ பாதுகாப்பு குறித்த அடிப்படை தீயணைப்பு பயிற்சி இன்று காலை, 10:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.
இந்த பயிற்சியில் தனியார் நிறுவன பாதுகாவ-லர்கள் (செக்யூரிட்டி) கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இருந்து, 403 பேர் பயிற்சி பெற உள்-ளனர். இதில், மாடி கட்டடங்கள், தொழிற்சா-லைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்-களில் தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது குறித்து ஒத்திகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
