ADDED : நவ 03, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், நவ. 3-
ஓசூர், ராம்நகரை சேர்ந்தவர் நுாருபாய், 40. ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, பழைய பொருட்கள் குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது தீப்பொறி பறந்து வந்து குடோனில் விழுந்தது. இதில், பழைய பொருட்கள் தீயில் எரிய துவங்கின. ஓசூர் தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.