/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொகரப்பள்ளி காப்புக்காட்டில் தீ
/
தொகரப்பள்ளி காப்புக்காட்டில் தீ
ADDED : மார் 10, 2026 07:14 AM

கிருஷ்ணகிரி: தொகரப்பள்ளி காப்புக்காட்டில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், ஆயிரம் ஏக்கர் மேலான பரப்பளவில் தொகரப்பள்ளி காப்புக்காடு உள்ளது. இதில், அரிய வகை உயிரினங்களும், அறிய வகை மரங்களும் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால், மழையின்றி காப்புக்காடு முழுவதும் காய்ந்துள்ளது.
இந்நிலையில், காப்புக்காட்டின் சாலையோரத்தில் இருந்த காய்ந்த மரம், புற்கள், செடி மற்றும் கொடிகள் தீப்பற்றி எரிந்ததை பார்த்த வாகன ஓட்டிகள், இது குறித்து பர்கூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, நிலைய அலுவலர் சேட்டு தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பழனி, அன்புமணி, பொன்மணி, சந்தோஷ்குமார் ஆகியோர், வனப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை, மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் புகை பிடித்து விட்டு அதை அணைக்காமல் வீசி விட்டு சென்றதால், தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

