ADDED : மே 18, 2026 02:25 AM

அ நிறம் | அளவு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், குள்ளனுார் ஏரியி-லிருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில், ஜி.ஹெச்.,ஐ ஒட்டி அதிகளவு கோரை புற்கள் முளைத்திருந்த நிலையில், தொடர் வெயிலின் தாக்கத்தால் அவை காய்ந்திருந்தன.
இந்நிலையில் நேற்று காலை, மர்ம நபர்கள் தீ வைத்ததில், கோரைப்புற்கள் முழுவதும் தீப்பற்றி மளமளவென தீ பரவியது. இதனால், ஜி.ஹெச்., ரிஜிஸ்டர் ஆபீஸ், அரசுப்பள்ளி, மாண-வர்கள் தங்கும் விடுதி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த அப்பகு-தியில், தீ பரவி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. தகவலின்-படி போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். போச்சம்பள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.
