ADDED : ஜூன் 08, 2026 05:17 AM

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், பொது-மக்கள் மத்தியில் தீ விபத்து குறித்து விழிப்பு-ணர்வு ஏற்படுத்தும் வகையில், 'வாங்க கற்று கொள்ளலாம்' என்ற தலைப்பில், இரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிலிண்டர் மற்றும் விறகு அடுப்புகளில் ஏற்படும் தீ, மின்சார தீ, வாகன தீ, பட்டாசு தீ பற்றியும், அவற்றை எவ்-வாறு கையாண்டு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், ஓசூர் தீயணைப்புத்துறை நிலைய அலு-வலர் (போக்குவரத்து) பாலசுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள், செயல்விளக்கம் மூலம் பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தனர்.
அதேபோல், தேன்கனிக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திலும், இரு நாட்கள் பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்து, நிலைய அலுவலர் ராஜா தலைமையில், இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
* ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ தடுப்பு,பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படுவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது குறித்து செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்து விழிப்புணர்வை ஏற்ப-டுத்தினர்.
