ADDED : மே 07, 2026 02:47 AM

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், தீயணைப்பு துறை சார்பில், தீ விபத்துகளை தடுப்பது மற்றும் தற்காப்பு நடவடிக்-கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் நேற்று நடந்தது. ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் எழிலரசி முன்னிலை வகித்தார். இதில் டாக்டர்கள் பாரதிராஜா, பிரபா, திவ்ய பாரதி, சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். செவிலியர் கண்காணிப்பாளர் விஜயா, செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் மருத்துவமனை பணி-யாளர்கள் பங்கேற்றனர்.மருத்துவமனை போன்ற பொது இடங்களில் தீ விபத்து ஏற்-பட்டால், பதற்றமடையாமல் செயல்படுவது குறித்து, தீய-ணைப்பு துறையினர் விரிவான விளக்கம் அளித்தனர். மருத்துவ-மனை வளாகத்தில், தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்-னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீயணைப்பு கருவிகள் பயன்பாடு, தீயணைப்பு கருவிகளை எவ்வாறு சரியான முறையில் கையாள்-வது என்பது குறித்த நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்-டது. பேரிடர் காலங்களில் அல்லது புகை மூட்டத்தின் போது மருத்துவமனையில் சிக்கிக் கொண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும், தீக்-காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உடனடி முத-லுதவி சிகிச்சை குறித்தும், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்-டது.
