ADDED : ஜூன் 24, 2026 05:24 AM

அ நிறம் | அளவு
சூளகிரி:தென்மேற்கு
பருவமழையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தீயணைப்பு
மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், பொதுமக்கள் தங்களை எவ்வாறு
பாதுகாத்து கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று
நடந்தது.
நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்களை எவ்வாறு
காப்பாற்றுவது, வெள்ள நீர் மற்றும் ஆற்றில் அடித்து செல்பவர்களை
கயிறுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் மூலம் எவ்வாறு காப்பாற்றுவது
என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் (பொறுப்பு)
முருகன் தலைமையில், நல்லகானகொத்தப்பள்ளி ஏரியில்,
தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் செய்து, பொதுமக்கள்
மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
