/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி கே.ஆர்.பி., அணையில் மீன்பிடிக்க தடை 1,000 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
/
கி.கிரி கே.ஆர்.பி., அணையில் மீன்பிடிக்க தடை 1,000 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
கி.கிரி கே.ஆர்.பி., அணையில் மீன்பிடிக்க தடை 1,000 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
கி.கிரி கே.ஆர்.பி., அணையில் மீன்பிடிக்க தடை 1,000 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
ADDED : டிச 17, 2024 07:35 AM
கிருஷ்ணகிரி: குத்தகை காலம், 5 ஆண்டுகள் முடிந்த நிலையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் கடந்த, 5 ஆண்டுகளாக பருவதராஜ மீனவர் நல கூட்டுறவு சங்கத்தினர் டெண்டர் எடுத்து மீன்பிடித்து வந்தனர். கடந்த, 3ல் டெண்டர் காலம் முடிந்த நிலையில், அணையில் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டது. அணையில் மீன் பிடித்து வரும் பழைய பேயனப்பள்ளி, தாளாப்பள்ளி, துரிஞ்சிப்பட்டி, பெல்லாரம்பள்ளி ஆகிய, 4 பஞ்., சேர்ந்த, 1,000 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாகவும், அணையில் மீன் பிடிக்க பழைய முறையில் அனுமதிக்க வேண்டும் என,
கோரி நேற்று, கே.ஆர்.பி., அணை மீன்வள பயிற்சி மையத்தில் திரண்டனர். அவர்களிடம், மீன்வள ஆய்வாளர் சுதர்சன் மற்றும்
இன்ஸ்பெக்டர் குலசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.மீன் பிடிப்பவர்கள் கூறுகையில், 'கடந்த, 20 ஆண்டுகளாக கே.ஆர்.பி., அணையில் மீன் பிடித்து வருகிறோம். வழக்கமாக குத்தகை
காலம் முடிந்து, அடுத்த குத்தகை விடும் வரை, அணையில் பிடிக்கும் மீன்களில் பாதி எங்களுக்கும், பாதி மீன்வளத்துறைக்கும்
கொடுப்பது வழக்கம். அதன்படி அடுத்த குத்தகை காலம் வரை, எங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். இதை நம்பித்தான்
நாங்கள் வாழ்கிறோம். வரும், 20க்குள் மீன்பிடிக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்றனர்.மீன்வள ஆய்வாளர் சுதர்சன் பேசுகையில், ''உயரதிகாரிகளிடம் பேசி வரும், 20க்குள் அனுமதி பெற்றுத் தருகிறேன். அதற்குள்,
மீன்பிடிப்பவர்கள் தனித்தனியாக தங்களது கோரிக்கை மனுவை அலுவலகத்தில் வழங்க வேண்டும். அதுவரை யாரும்
மீன்பிடிக்கக் கூடாது,'' என்றார்.