/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வட மாநில தொழிலாளர்களை பணம் கேட்டு தாக்கிய ஐவர் கைது
/
வட மாநில தொழிலாளர்களை பணம் கேட்டு தாக்கிய ஐவர் கைது
வட மாநில தொழிலாளர்களை பணம் கேட்டு தாக்கிய ஐவர் கைது
வட மாநில தொழிலாளர்களை பணம் கேட்டு தாக்கிய ஐவர் கைது
ADDED : பிப் 13, 2024 11:34 AM
கிருஷ்ணகிரி: ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவிலை சேர்ந்தவர் செல்வம், 38; தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை சேர்த்து விடும் ஏஜன்ட்; இவர், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மோகன்ராம், 26, பரசுராம், 29, ரூபேஸ் மஞ்சி, 22, திலத்தராம், 36, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காளிதர்பிரதான், 20, சுக்தேவ் ராம், 60, ஜெய்பிரகாஷ் ராம், 21 ஆகிய, 7 பேரை, கிருஷ்ணகிரியில் வேலை இருப்பதாக கூறி அழைத்துள்ளார்.
அவர்கள் கடந்த, 8ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரயிலில் வந்துள்ளனர். அவர்களை மாருதி வேனில் ஏற்றிச்சென்ற செல்வம் தரப்பினர், கிருஷ்ணகிரியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர். பின்னர் அவர்களை அங்கிருந்து, 9ம் தேதி மதியம் வேனில் ஏற்றிக் கொண்டு ஜிஞ்சுப்பள்ளி ஏரிக்கரையோரம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு டூவீலர்களில் வந்த செல்வம் தரப்பினர், வடமாநில தொழிலாளிகள், 7 பேருக்கும் வேலை வழங்க தலா, 20,000 ரூபாய் கேட்டுள்ளனர். பணம் இல்லை என்றதால், மோகன்ராம் உட்பட, 7 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து, குருபரப்பள்ளி போலீசில் மோகன்ராம் புகார்படி, அவர்களை தாக்கிய போச்சம்பள்ளி வடமலம்பட்டி கூட்ரோடு நிசாந்த், 26, பழனி ஆண்டவர் நகர் அருள், 28, வடமலம்பட்டி பிரபு, 28, அரவிந்தன், 23, மணிகண்டன், 29 ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1,500 ரூபாய், 7 மொபைல்போன், ஒரு ஆம்னி கார், 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஏஜன்ட் செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.