ADDED : ஜூலை 31, 2025 01:36 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் என, 300 பேருக்கு நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் பிளாஸ்க் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மழைக்காலம் தொடங்கி விட்டதால் கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு பயன்படும் வகையில், 300 பேருக்கு பிளாஸ்க்குகளை என் சொந்த நிதியில் வழங்கி உள்ளேன்,” என்றார்.
நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணி
யாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
