/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
/
பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
ADDED : மார் 20, 2024 01:51 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில்,
லோக்சபா தேர்தல் வரும், ஏப்., 19ல் நடக்கிறது. தேர்தல் நடத்தை
விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில்,
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் நேற்று பறக்கும் படை அலுவலர்
சவுமியா ரவி தலைமையில் எஸ்.எஸ்.ஐ., ரகோத்தமன், ஏட்டுகள் சிங்காரம்,
ரமேஷ், கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம், சுங்கச்சாவடி, உட்பட
பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து,
பறக்கும்படை அதிகாரிகள் கூறியதாவது: லோக்சபா தேர்தலை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள்
வினியோகம் எதுவும் நடக்கிறதா என, கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள்
அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள், 24 மணி நேரமும் முக்கிய இடங்களில் இந்த
சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

