/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர் ஆணைய தலைவரின் அடுத்தடுத்த கேள்வி; அதிர்ச்சியில் நிருபர்களை வெளியேற்றிய மாந-கராட்சி கமிஷனர்
/
துாய்மை பணியாளர் ஆணைய தலைவரின் அடுத்தடுத்த கேள்வி; அதிர்ச்சியில் நிருபர்களை வெளியேற்றிய மாந-கராட்சி கமிஷனர்
துாய்மை பணியாளர் ஆணைய தலைவரின் அடுத்தடுத்த கேள்வி; அதிர்ச்சியில் நிருபர்களை வெளியேற்றிய மாந-கராட்சி கமிஷனர்
துாய்மை பணியாளர் ஆணைய தலைவரின் அடுத்தடுத்த கேள்வி; அதிர்ச்சியில் நிருபர்களை வெளியேற்றிய மாந-கராட்சி கமிஷனர்
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
ஓசூர்: ஓசூரில் நடந்த தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு கூட்டத்தில், அடுக்க-டுக்கான கேள்விகளை அவர் முன்வைத்ததால், அதிர்ச்சியடைந்த மாநகராட்சி கமிஷனர் நிருபர்-களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அலு-வலகத்தில், தேசிய துாய்மை பணியாளர் ஆணையம் சார்பில், துாய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நேற்று மதியம் நடந்தது.
தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்-கடேசன், தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில், மாநகராட்சியில் தனியாரிடம் ஒப்-பந்த அடிப்படையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், நிரந்தர பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சீருடை, ஊதியம், இ.எஸ்.ஐ.,- பி.எப்., இன்சூரன்ஸ், அடை-யாள அட்டை, வேலை நேரம் குறித்து கேட்டார். அதற்கு, 31 நாட்கள் பணியாற்றினால் தான், 10,250 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதை உயர்த்தி வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., பிடித்த விபரங்கள், மொபைலில் குறுஞ்-செய்தி வருவதில்லை என்றும், ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பா-லான துாய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். மாநகராட்சியில், 587 துாய்மை பணியாளர்கள் இருப்பதாக கூறி விட்டு, ஆய்வு கூட்டத்திற்கு தனியார் ஒப்பந்ததாரர், 20 துாய்மை பணியாளர்-களை மட்டுமே அழைத்து வந்துள்ளார். இ.எஸ்.ஐ., -பி.எப்., குறித்த விபரங்களை, சரியாக துாய்மை பணியாளர்களுக்கு தெரியவில்லை என, தலைவர் வெங்கடேசன் ஆதங்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி கமி-ஷனர் சினேகா, கூட்டத்தில் நடப்பவற்றை செய்-தியாக வரவிடாமல் தடுப்பதற்காக, செய்தி சேகரிக்க காத்திருந்த, போட்டோகிராபர்கள், நிருபர்களை, கூட்ட அரங்கில் இருந்து வெளி-யேற்ற வைத்தார். இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்ன-தாக, ஓசூர் பஸ் ஸ்டாண்டில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். சப் கலெக்டர் பிரியங்கா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், செயற்பொறியாளர் ராஜாராம், மாநகர நல அலு-வலர் பிரபாகரன், டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.