/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெயரளவுக்கு ஆய்வு செய்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
/
பெயரளவுக்கு ஆய்வு செய்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
பெயரளவுக்கு ஆய்வு செய்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
பெயரளவுக்கு ஆய்வு செய்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
ADDED : நவ 22, 2024 01:21 AM
கிருஷ்ணகிரி, நவ. 22-
கிருஷ்ணகிரி நகரை சுற்றிய பகுதிகளில் நாளுக்கு நாள், அனுமதியின்றி சாலையோர கடைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுகுறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், 'காலைக்கதிர்' கடந்த, 9ல் செய்தி வெளியிட்டது. பல புகார்கள் கலெக்டருக்கும் சென்றன. அவர் உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறையினரும், சாலையோர கடைகளுக்கு, நோட்டீஸ் வழங்கி, கடைகளை அகற்ற எச்சரித்தனர். இதை முதலில் ஆய்வு செய்ய வேண்டிய உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை. கலெக்டரிடம் புகார் சென்றதையடுத்து, அவர்களை, மாவட்ட கலெக்டர் சரயு கடிந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, பெயரளவிற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையில், 35 சாலையோர கடைகளில் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது செய்திக்காக வந்து செல்லும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.