/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வில் கலப்பட டீ துாள் அழிப்பு
/
உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வில் கலப்பட டீ துாள் அழிப்பு
உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வில் கலப்பட டீ துாள் அழிப்பு
உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வில் கலப்பட டீ துாள் அழிப்பு
ADDED : நவ 11, 2025 02:13 AM
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் தலைமையிலான அதிகாரிகள், கிருஷ்ணகிரி நகர் பகுதியிலுள்ள டீக்கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, கிருஷ்ணகிரி அண்ணாதுரை சிலை அருகே மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே என, 2 டீ கடைகளில் கலப்பட டீத்துாள் மூலம், பொதுமக்களுக்கு டீ விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது.
சம்பந்தப்பட்ட டீக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு, வழக்குப்பதிந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கடைகளில் இருந்த டீத்துாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. ஆய்வின் போது, சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், நுகர்வோர் சங்க மாநில துணைத்தலைவர்கள் சையத் அஸ்ஹர், ஜெய்சன், மாநில செயலாளர் ரோஷன் ரஷீத் உட்பட பலர் உடனிருந்தனர்.