ADDED : பிப் 03, 2026 07:00 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்-ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வர-வேற்றார்.
இதில், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பிளஸ் 1 படிக்கும், 370 மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். மேலும் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்-களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பெரியமுத்துார் பஞ்.,க்கு உட்பட்ட அவதானப்பட்-டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 12.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார்.கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) நாராயணன், (மத்தியம்) மகேந்திரன், முன்னாள் பஞ்.,தலைவர் பானுப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
