தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'குரூப் - 2, 2ஏ ' போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

'குரூப் - 2, 2ஏ ' போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

'குரூப் - 2, 2ஏ ' போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : ஆக 18, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்-புகள், வரும்,

20-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமி-ழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 2026-ம் ஆண்டு திட்ட நிரலின்படி, உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் நிலை 2 மற்றும் முதுநிலை ஆய்வாளர் ஆகிய 821 பத-விகளை உள்ளடக்கிய டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2, 2ஏ' போட்டி தேர்விற்கான அறிவிப்பு கடந்த, 11ல், வெளியிடப்பட்டது. இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்-டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டும் மையத்தில் வரும், 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.இப்பயிற்சி வகுப்பில் சிறுதேர்வுகள் மற்றும் முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த அலுவலகத்தில் பள்ளிப்பாட புத்தகங்கள் உட்பட, 3,000-க்கும் மேற்பட்ட நுால்கள் அடங்கிய இலவச நுாலக வசதி, பயிலக வசதி, இலவச வைபை மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதிகள் போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதி களும் உள்ளன. எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்-ளவர்கள், https://forms.gle/SxcopxZ5SDCzCf6e6 இணைப்பின் மூலம், தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04343 -291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us