ADDED : ஏப் 24, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை:ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காரப்பட்டு அரிமா சங்கம், ஊத்தங்கரை அரிமா சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய, இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
இதில், 110 நோயாளிகள் கலந்து கொண்டனர். 40 நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு கண் அறுவை சிகிச்சைக்காக மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

