ADDED : ஜூன் 29, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; காவேரிப்பட்டணம்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்
மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, காவேரிப்பட்டணத்தில் இலவச
கண் சிகிச்சை முகாமை நடத்தின.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட
செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வெங்கடேசன், ஸ்ரீவிஷ்ணு,
குமரன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களை
பரிசோதித்து, 20 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்து,
கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகாம் ஏற்பாடுகளை,
ரெட் கிராஸ் காவேரிப்பட்டணம் கிளை செயலாளர் சண்முகம், ஜெயபால், சேஷாகிரி
ஆகியோர் செய்திருந்தனர்.
