/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்
ADDED : டிச 16, 2024 02:49 AM
கெலமங்கலம்: கெலமங்கலம் வட்டார வள மையத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் மொத்தம், 35 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிய-ருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 26 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 4 பேருக்கு சக்கர நாற்-காலி, 7 பேருக்கு காதொலி கருவி, 17 பேருக்கு அறிவுத்திறன் குறைபாடு பெட்டகம் ஆகியவை வழங்க, மருத்துவர்கள் பரிந்-துரை சென்றனர். 26 பேருக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டையை, முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் ஜோதி, வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ண தேஜஸ், வேதா, கோவிந்தப்பா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சேட்டு உட்பட பலர்
பங்கேற்றனர்.
சூளகிரி வட்டார வள மையத்தில் இன்றும் (டிச.16), தளியில், 19ம் தேதியும், ஓசூரில், 20ம் தேதியும்
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்க உள்-ளது.