ADDED : ஜன 22, 2026 07:04 AM
அ நிறம் | அளவு
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், பாளையம் சுங்கச்சாவடி நிறுவனம் சார்பில், 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை, முழு உடல் பரிசோதனை முகாம் நடந்-தது. இதை மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் துவக்கி வைத்தார்.
இதில், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய குழு தலைவர் ரவி, தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், ஆர்.டி.ஓ., ஜெயதேவ்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், போக்-குவரத்து கழக துணை மேலாளர் இளங்கோ, தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சுங்கச்-சாவடி திட்ட தலைவர் நரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
