/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளி பெண்களுக்காக இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு
/
மாற்றுத்திறனாளி பெண்களுக்காக இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு
மாற்றுத்திறனாளி பெண்களுக்காக இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு
மாற்றுத்திறனாளி பெண்களுக்காக இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு
ADDED : மே 08, 2025 12:52 AM
ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுார் அருகே எல்.என்., நகரில், தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவசமாக தையல், ஆரி ஒர்க், எம்ராய்டரி ஒர்க் பயிற்சி அளிக்க, தமிழகத்திலேயே முதல் முறையாக திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, 3 மாத கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். பொருளாளர் காந்திமதி வரவேற்றார். மாநில செயலாளர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் தங்கமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே ஆகியோர், திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தனர். 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக சேலத்தில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். சேலம் மாவட்ட தலைவர் மூர்த்தி, திருப்பூர் மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் முத்துபாண்டி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திம்மராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

