தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்

மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்

மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்


ADDED : ஜன 06, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநி-லைப்பள்ளியில், 900 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரை-யாண்டு தேர்வு முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது.

மூன்றாவது பருவம் துவங்கிய முதல் நாளிலேயே, மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடைகள், நோட்டு போன்றவற்றை, ஓசூர் மாநகர மேயர் சத்யா வழங்-கினார். முன்னதாக தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நடப்பாண்டு தேசிய திறனாய்வு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து, இரண்டாம் பருவ தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பள்ளிக்கு விடுமுறை எடுக்-காமல் வந்த, 5 முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வட்டார கல்வி அலுவலர் அன்னையா, பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜி, மாநகராட்சி மண்டல தலைவர் ரவி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் முனிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் பொன்-நாகேஷ் செய்திருந்தார்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனே-கொள்ளு பஞ்., உட்பட்ட தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்-கான அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு, சீரு-டைகள் ஆகியவற்றை, பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசலு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us