தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆர்.ஆர்.பி., தேர்வுக்கு பயிற்சி 26ல் இலவச வகுப்பு துவக்கம்

ஆர்.ஆர்.பி., தேர்வுக்கு பயிற்சி 26ல் இலவச வகுப்பு துவக்கம்

ஆர்.ஆர்.பி., தேர்வுக்கு பயிற்சி 26ல் இலவச வகுப்பு துவக்கம்


ADDED : பிப் 22, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆர்.ஆர்.பி., 'குரூப் -டி' போட்டி தேர்-விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 26ல் துவங்குகிறது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆர்.ஆர்.பி., எனப்படும் ரயில்வே ஆட்-சேர்ப்பு வாரியத்தால் 'குரூப்- டி' பிரிவில், 22,195 காலிப்பணியி-டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக வரும் மார்ச், 2 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வை தமிழிழும் எழுதலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த போட்டி தேர்வர்கள் பயன-டையும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 26 முதல் வாரநாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.

இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகளும், முழு மாதிரி தேர்-வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள-வர்கள் https://tinyurl.com/bddcy2tw என்ற இணைப்பின் மூலம், தங்-களை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04343 -291983 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்-ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us