ADDED : ஏப் 26, 2025 01:38 AM
ஓசூர்:ஓசூர் அருகே, கோபனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட தேவகானப்பள்ளி கிராமத்தில், எஸ்.முதுகானப்பள்ளி கால்நடை மருத்தகம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் (டீல்) நிறுவனம் சார்பில், இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவர் வித்யாவதி தலைமையில், கால்நடை ஆய்வாளர் முனியப்பா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜாவித் ஆகியோர், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமான, 500க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகளுக்கு காய்ச்சல், அஜீரணம், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்தனர்.
டீல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டம் மூலம், அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. டீல் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு, சமூக மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் ராமதாஸ், சுரேஷ், பிரவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

