/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு; விவசாயிகள் சங்கத்தினர் 81 பேர் கைது
/
கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு; விவசாயிகள் சங்கத்தினர் 81 பேர் கைது
கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு; விவசாயிகள் சங்கத்தினர் 81 பேர் கைது
கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு; விவசாயிகள் சங்கத்தினர் 81 பேர் கைது
ADDED : மே 24, 2024 07:00 AM
ஓசூர் : கேரள மாநிலம் கொச்சின், கோட்டநாடு முதல் தமிழகத்தின் கோவை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 9 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு, 294 கி.மீ., துாரத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதில், ஓசூர் அடுத்த நாகொண்டப்பள்ளி பஞ்., எடப்பள்ளி, சூத்தாளம், இடையநல்லுாரில் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் குழாய் பதிப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நேற்று, ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள சப் கலெக்டர் அலுவலகத்திற்கு முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் திம்மாரெட்டி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பெருமாள் பேசினார். தொடர்ந்து, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்காவிடம் மனு அளிக்க சென்றனர். அவர்களை, ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் மற்றும் போலீசார் தடுத்துபோது, விவசாயிகள் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.அங்கு வந்த ஓசூர் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குருநாதன், ஓசூர் தாசில்தார் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட, 16 குடும்பத்தினர் சென்று, ஓசூர் சப் கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கூறி, போலீசார், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து, 35 பெண்கள் உட்பட, 81 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.