/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கல்
ADDED : ஜன 15, 2026 05:15 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, ஹிந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் முன்னிலையில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள், இளைஞரணியின-ருக்கு பொங்கல் பரிசு வழங்கினார். நகராட்சி துாய்மை பணியா-ளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட, 400 பேருக்கு பொங்கல் பரிசு பெட்டகத்தையும் வழங்கினார்.
நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் உள்ளிட்டவை நடந்தது.
மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடல-ரசு மூர்த்தி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ்-ராஜன், துணை அமைப்பாளர் மகேந்திரன், கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்-டனர்.

