ADDED : ஜன 09, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்-பள்ளியை சேர்ந்தவர் கெம்பேகவுடு, 42, கூலித்தொழிலாளி; மத்-திகிரி அருகே கலுகொண்டப்பள்ளியில் குடும்பத்துடன் தங்கி-யுள்ளார். இவரது மகள் காயத்ரி, 8, நீண்ட நாளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வலிப்பு ஏற்பட்டதால், ஓசூர் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி காயத்ரி உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

