அரசு ஐ.டி.ஐ., மாணவி மாயம் இரு வாரமாக தவிக்கும் பெற்றோர்
அரசு ஐ.டி.ஐ., மாணவி மாயம் இரு வாரமாக தவிக்கும் பெற்றோர்
ADDED : செப் 26, 2026 06:03 AM
ஓசூர்; அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வரும் மாணவி, இரு வாரங்களுக்கு முன் மாயமானதால், பெற்றோர் கவலையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்-தவர், 15 வயது சிறுமி; அரசு ஐ.டி.ஐ.,யில் முதலா-மாண்டு படிக்கிறார்; கடந்த, 10ம் தேதி ஐ.டி.ஐ.,க்கு புறப்பட்டு சென்ற மாணவி, அங்குள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து மாயமானார். அவரது தாய் புகார்படி, மத்திகிரி போலீசார் வழக்கு பதிந்தனர். இருவர் மீது சந்தேகம் இருப்பதாக, மாணவியின் தாய் போலீசாரிடம் தெரிவித்தார்.அதில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்-தனர். ஆனால், மற்றொரு நபரை அழைத்து வந்து விசாரிக்கவில்லை. விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்பதால், போலீசார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. மாணவி மாயமாகி இரு வாரமாகி-யுள்ள நிலையில், அவரது பெற்றோர் கவ-லையில் உள்ளனர். தங்களது மகளை கண்டுபி-டித்து தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்-ளனர்.
இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, 'மாணவி மாயமானது தொடர்பாக ஏற்கனவே ஒருவரிடம் விசாரித்துள்ளோம். மாணவி யாரிடம், அதிக நேரம் மொபைல்போனில் பேசினார் என்பதை அறிய விபரங்களை சேகரித்து வருகிறோம். அது கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட நபரை பிடித்து வந்து விசாரித்து மாணவியை மீட்போம்,' என்றனர்.
