/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவி சாவு
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவி சாவு
ADDED : ஏப் 13, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேலகொண்டப்பள்ளி அருகே உளிவீரனப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகள் ஷில்பா, 17. கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ இரண்டாமாண்டு படித்து வந்தார்.
கடந்த, 9 முதல், காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி, தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு வீட்டில் வாந்தி எடுத்தார். அவரை, ஓசூர் தனியார் மருத்-துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் வழியி-லேயே மாணவி உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.

