ADDED : ஜன 13, 2025 02:39 AM
ஓசூர்: ஓசூர், காமராஜ் காலனி கே.ஏ.பி., திருமண மண்டபத்தில், வள்ள-லாரின் விவேகம் அறக்கட்டளையின், 5ம் ஆண்டு விழா, வள்ள-லாரின், 202வது பிறந்த நாள் விழா மற்றும் ஜீவகாருண்ய விருது வழங்கும் விழா இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.
இதில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்க உள்ளார். அதற்காக இன்று காலை, 7:50 மணிக்கு, சென்னையிலிருந்து விமானத்தில், 8:55 மணிக்கு பெங்களூரு விமான நிலையம்
வந்தடைகிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக, 10:15 மணிக்கு, ஓசூர் மூக்-கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டலுக்கு வருகிறார். காலை, 11:00 மணிக்கு, கே.ஏ.பி., திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்-சியில் பங்கேற்று, மதியம், 12:30 மணிக்கு மீண்டும் ஹில்ஸ் ஓட்டல் செல்கிறார். 3:30 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு சாலை மார்க்கமாக சென்று, அங்கிருந்து விமானம் மூலம், சென்னை செல்கிறார். ஓசூரில், 300க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணிக்குகுவிக்கப்பட்டுள்ளனர்.