sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் அரசு பள்ளி ஹெச்.எம்.,

/

மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் அரசு பள்ளி ஹெச்.எம்.,

மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் அரசு பள்ளி ஹெச்.எம்.,

மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் அரசு பள்ளி ஹெச்.எம்.,


ADDED : ஜூலை 05, 2024 01:06 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்-கையை அதிகரிக்க, தன் சொந்த செலவில் சைக்கிள்களை அப்-பள்ளி தலைமையாசிரியர் வழங்கி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பண்டசீமனுார் கூட்-ரோடு அருகே குண்டலானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. கடந்த, 1986 ல் துவங்கப்பட்ட இப்பள்ளி, 38 ஆண்டுகளை கடந்துள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதி மாண-வர்கள் படித்து வந்தனர். தனியார் பள்ளி மோகத்தால் மாண-வர்கள் சேர்க்கை குறைந்தது. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், 2 ஆசிரியர்களை கொண்டு இயங்கிய பள்ளி, தற்போது ஓராசிரியர் பள்ளியாக மாறியுள்ளது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தற்போது தலைமை ஆசிரியாக பணியாற்றும் வெங்க-டாபதி, தன் சொந்த செலவில் மாணவர்களுக்கு, சிறுவர்களுக்-கான சைக்கிள்கள் வாங்கி கொடுத்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த, 10 ஆண்டுகளாக பள்-ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து, ஓராசிரியர் பள்ளியானதால், தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டு, பாடங்களையும் நானே எடுத்து வருகிறேன். பள்ளியில், 6 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், அதை அதிகப்படுத்த, 6,500 ரூபாய் மதிப்-புள்ள சிறுவர்களுக்கான சைக்கிளை, சொந்த செலவில் வழங்கி வருகிறேன். கடந்தாண்டில், 4 மாணவர்களுக்கும், நடப்பாண்டில், 3 மாணவர்களுக்கும் வழங்கியுள்ளேன். அரசு பள்ளியின் சலுகைக-ளோடு, சிறப்பான கல்வியை கொடுக்கவும் முயன்று வருகிறேன். மாணவர்களின் பெற்றோரும் இதை உணர்ந்து, பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்,” என்றார்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தனியார் பள்ளியை போன்று கட்டமைப்பை மாற்றி, சுற்றுச்சுவர், குண்டும் குழியு-மான பாதைக்கு பேவர் பிளாக் கற்கள் பதித்து பாதையை அரசு சரி செய்து கொடுத்தாலே, அப்பள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர தயாராக உள்ளனர்' என்றனர்.






      Dinamalar
      Follow us